எங்கே போகிறது நாட்டுப்பற்று?… பாகிஸ்தான் வாழ்க என்பதுதான் நாட்டுப்பற்றா?… பள்ளி சுவர்களில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்…

Default Image

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் உள்ள புடர்சிங்கி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் கதவுகளில் சாக்குக்கட்டியா பாகிஸ்தானுக்கு ஆதரவான வரிகள் எழுதப்பட்டுள்ளது. அந்தப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் நேற்று வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்டது. அப்போது பள்ளியை திறக்கவந்த ஆசிரியர்கள் கன்னடத்தில் எழுதப்பட்டிருந்த பாகிஸ்தான் ஆதரவு வரிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளிக்கதவுகளில் ‘பாகிஸ்தான் வாழ்க’  என்றும் மற்றும் ‘திப்புசுல்தான் பள்ளி’ என்றும்   வரிகள் இடம்பெற்றிருந்தன.

Image result for இந்திய நாட்டுப்பற்று

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து பாகிஸ்தான் ஆதரவு வரிகளை பள்ளி கதவுகளில் எழுதி சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஒன்றும் அறியாத மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் சுவர்களில் இப்படி பிரிவினையை தூண்டும் விதமாகவும் நாட்டுப்பற்றை கேளிக்கூத்தாக்கும் இத்தகைத வரிகளை எழுதிய கயவர்களை விரைந்து கைது செய்து தகுந்த தண்டனை வாங்கித்தரவேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்