ரேபிட் கிட்களை இறக்குமதி செய்ய 67 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி.!
கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட் கருவிகளை வாங்குவதற்கு 67 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை இந்தியா தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
தற்போது ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் பரிசோதனை கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என 67 இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 5 நிறுவனங்களை இந்தியாவிலும் மற்ற நிறுவனங்களை சீனா, தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவி மூலம் அரை மணிநேரத்தில் நமது உடலில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருக்கிறதா என கண்டறிந்து நோய்த்தொற்று இருக்கிறதா என தெரிந்துவிடும். ஆனால், பி.சி.ஆர் முறைப்படி கொரோனா தொற்று கண்டறிய 2 – 3 நாட்கள் ஆகும்.