இந்தியா-பாகிஸ்தான் போர் கால 27 மோட்டார் குண்டுகள்.. திரிபுரா கிராமத்தில் கண்டுபிடிப்பு.!

27 mortar shells

திரிபுரா : மேற்கு மாவட்டத்தில் வங்கதேச எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கிராமவாசி ஒருவராது மீன்குளத்தை தோண்டியபோது, ​​1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 27 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மோட்டார் குண்டுகள் கிடைத்தது குறித்து இந்த தகவலை அறிந்து வந்த, பமுதியா புறக்காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு மற்றும் TSR பணியாளர்கள் அகழாய்வைத் பணியை தொடங்கினர். மொத்தம் 27 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டன, இந்த கண்டுபிடிப்பு அடுத்து அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில், குண்டுகள் பீரங்கிகளில் இருந்ததா அல்லது மோர்டார்களிலிருந்து வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ப ன்னர், அவை மோட்டார் குண்டுகள் என அதிகரிகள் உறுதி செய்தனர்.

இந்த குண்டுகள் சுமார் 53 ஆண்டுகளாக புதைக்கப்பட்டிருக்கலாம் என் மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த குண்டுகளை உருவாக்கிய நாடு அல்லது உற்பத்தியாளர் தொடர்பான தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்