இந்தியா-பாக். எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்-உளவுத்துறை.!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு என அமெரிக்க உளவுத்துறை தகவல்.
இந்திய, பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அதிக பதற்றம் வர வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க எம்.பி க்களிடம் உளவுத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தனது மேற்கு எல்லைகளை பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அதிகமாக பகிர்கிறது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா, பாகிஸ்தானுடன் எப்போதும் எல்லைப்பகிர்வு குறித்த பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில் வரும் காலங்களில் இந்திய எல்லைகளில் இன்னும் பதற்றம் அதிகரிக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் எந்தவித சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதாகவும், கடந்த முறை சீனா மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறிய எல்லை தாக்குதல் செயல்களுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும், அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.