#Helinamissile:இலக்கை துல்லியமாக தாக்கும் “ஹெலினா” ஏவுகணை சோதனை- அசத்திய இந்தியா!
காஷ்மீர்,லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’ ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆகியவற்றின் விஞ்ஞானிகளின் குழுக்கள் கூட்டாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஹெலினா ஏவுகணையானது டிஆர்டிஓவின் ஏவுகணைகள் மற்றும் வியூக அமைப்புகள் (எம்எஸ்எஸ்) கிளஸ்டரின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தால் (டிஆர்டிஎல்) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை ஏழு முதல் எட்டு கிலோமீட்டர் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் தன்மை கொண்டுள்ளது.குறிப்பாக,ஹெலினா ஏவுகணை ஹெலிகாப்டரில் இருந்து பாய்ந்து எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் திறன் படைத்ததாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.