இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாலமோலின் அதாவது திரவ நிலையில் இருக்கும் பாமாயில் இவற்றை கட்டுப்பாடுகளின்றி இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கி இதை கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலுக்கு தற்போது மாற்றியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை மலேசியாவை மட்டுமே பெரிதும் பாதிக்கப்போகிறது. இதனடிப்படையில், இனி சுத்திகரிக்கப்படாத பாமாயிலை மட்டுமே இனி இந்தியா மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும்.
இந்த நடவடிக்கை சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பால்மோலின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மலேசியாவுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என்று தொழில் துறையினர் கூறுவதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது. கடந்த டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டின் முடிவில் மலேசிய பிரதமர் ஆற்றிய உரையில் ”காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதற்க்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்திலும் மலேசிய பிரதமர் இதே கருத்தையே கூறியிருந்தார்.இதே போல் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாக ஆவதில் இருந்து தவிர்க்கப்பட்டால் அது நியாயமல்ல,” என்று குடியுரிமை திருத்த சட்டத்தை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த மலேசியாவின் இந்தியாவிற்க்கு எதிரான நடவடிக்கையால் மலேசியாவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று இந்திய அரசின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த இந்தியாவின் அதிரடி நடவடிக்கை குறித்து பதிலளிக்க மலேசிய தொழில் துறை அமைச்சர் தெரேசா கோக் மறுத்துவிட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.இந்த இந்தியாவின் புதிய நடவடிக்கையால் உலக அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…