இந்தியா மற்றும் நேபாளம் இடையே பெட்ரோலிய பைப் -லைன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர் லாரி மூலமாக கொண்டு கொண்டு செல்லப்பட்டு வந்தது.ஆனால் நாளடைவில் இந்த திட்டத்திற்கு செலவு அதிகமானது.
இதனையடுத்து இதற்கான செலவுகளை குறைப்பதற்கு ஏதுவாக கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பூமிக்கு அடியில் குழாய் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு செல்வதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டமானது பீகாரில் உள்ள மோட்டிகாரி(Motihari) பகுதியில் இருந்து நேபாளத்தின் அம்லகன்ச் (Amlekhgunj) வரை சுமார் 69 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது.
இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பைப்-லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார். காணொளி காட்சி மூலமாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.மேலும் தெற்கு ஆசியாவில் இரு நாடுகளுக்கு இடையில் பைப் லைன் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…