இந்தியா அடுத்து வருகிற 6 முதல் 8 வாரங்களில் கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ள கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருந் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்பட உள்ளதாக பல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் இந்த மூன்றாம் அலையில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் இது குறித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், பெரும்பாலான மாநிலங்கள் தற்பொழுது பொது முடக்கத்திலிருந்து கொடுத்து வருவதாகவும் ஆனால், மக்கள் முதல் இரண்டு அலைகளில் இருந்து எவ்வித பாடமும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மக்கள் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை, முகக்கவசம் முறையாக அணிவதில்லை அதனால் தான் இந்தியா மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொரோனா மூன்றாம் அலையை இந்தியா வருகின்ற 6 முதல் 8 வாரங்களில் எதிர் கொள்ளலாம் எனவும், இந்த எண்ணிக்கை தற்பொழுது வெளிப்படையாக தெரிய சற்று காலம் ஆனாலும், இப்போது இருந்தே இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கான பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என தான் கருதுவதாகவும், மக்கள் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…