ரஷ்யாவிடம் இருந்து 70,000 AK-103 ரக துப்பாக்கிகளை வாங்க இந்தியா அவசரகால ஒப்பந்தம்!

Default Image

ரஷ்யாவிடம் இருந்து 70,000 ஏகே-103 ரக துப்பாக்கிகளை வாங்க இந்திய விமானப்படை அவசரகால ஒப்பந்தத்தில் கையெழுத்து.

இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளால் விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களைப் பெற வாய்ப்புள்ள நிலையில், இந்திய விமானப்படை தனது தற்போதைய சரக்குகளை INSAS க்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து 70,000 AK-103 தாக்குதல் துப்பாக்கிகளைப் அவசரகால ஏற்பாடுகளின் கீழ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

இந்திய விமானப்படைக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய தாக்குதல் துப்பாக்கிகள் தேவைப்படுவதாகவும், புதிய ஏகே -103 துப்பாக்கிகள் அடுத்த சில மாதங்களில் சேவைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீநகர் உள்ளிட்ட விமான தளங்களின் பாதுகாப்பில் ஈடுபடும் நவீனரக துப்பாக்கிகள் வாங்கப்படுகிறது. இது பயங்கரவாத தாக்குதல்களை சிறப்பாகச் சமாளிக்கும் திறனை வலுப்படுத்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்