தீவிரமடையும் குரங்கு அம்மை! RT-PCR சோதனைக் கருவியை சொந்தமாக உருவாக்கிய இந்தியா!

RTPCR Kit for MPox

டெல்லி : குரங்கு அம்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், விரைவாக நோயைக் கண்டறிவதற்கும் இந்தியா தற்போது RT-PCR சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.

தற்போது, ஆப்பிரிக்கா நாடுகளில் தீவிரம் அடைந்து வரும் குரங்கு அம்மை தோற்று நோயை உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது 2-வது பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது. இந்த வைரஸ் பரவக்கூடிய ஒன்றாகவும் குறிப்பாக அதிக இறப்பு விகிதங்களையும் கொண்டுள்ளது. இதனால், உலகநாடுகள் இதற்கு முன்னேற்பாடாகப் பல தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதிலும், இந்தியாவில் தற்போது இந்த தொற்று பரவவில்லை என்றாலும் மிகத் தீவிரமாக இந்த முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.

அதில் ஒரு பங்காக இந்தியா இந்த குரங்கு அம்மையை எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது சொந்தமாகவே ஒரு ஆர்.டி-பிஸிஆர் (RT-PCR) சோதனைக் கருவியை உருவாக்கி உள்ளது. மத்திய பாதுகாப்பு மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), இந்த சோதனைக் கருவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சோதனைக் கருவியை சீமென்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.

வழக்கமாகவே ஒரு பரிசோதனை முடிவுகளுக்கு 1-2 மணி நேரம் தேவைப்படும் நிலையில், இந்த சோதனைக் கருவி அந்த வழக்கத்தை மாற்றி வெறும் 40 நிமிடங்களிலேயே பரிசோதனையின் முடிவை நமக்குத் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த குரங்கு அம்மை ஆர்டிபிசிஆர் சோதனைக் கருவிகள், புனேவில் உள்ள ICMR-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மூலம் மருத்துவ ரீதியாகச் சரிபார்க்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்கள்.

மேலும், இந்த கருவி 1 ஆண்டுக்கு 1 மில்லியன் ரியாக்ஷன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனவும் தொழிற்சாலையில் கருவிகள் கிடைக்கத் தயாராக உள்ளது எனவும் சீமென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீமென்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ஹரிஹரன் சுப்ரமணியன் கூறுகையில், “இந்தியா, குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட இந்த சோதனை கருவிகளை வழங்குகிறோம்.

இதன் மூலம் இந்த நோயுடன் போராடுவதில் நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறோம். மேலும், நோயைத் துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிவதில் முக்கியத்துவம் கொடுக்கின்றோம், இது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறோம். இந்த குரங்கு அம்மை நோய் கட்டுப்படுத்த அடுத்தகட்ட ஒரு முக்கியமான படியாக இது அமைந்துள்ளது”, எனத் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஹரிஹரன் சுப்ரமணியன் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்