இலங்கை நிதி நெருக்கடி:
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இந்நிலையில், இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கும், மருந்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியா கடன் வழங்கியது.
ரூ.7,500 கோடி கடன்:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை இலங்கை நிதியமைச்சர் ஸ்ரீ பசில் ராஜபக்ச இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பும் பரஸ்பர நலன் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். அதே கூட்டத்தில், உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் வசதிக்காக SBI மற்றும் இலங்கை அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது (ரூ.7,500 கோடி) கடன் கொடுக்கிறது. முன்னதாக, இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்திய உதவிகள் மற்றும் இருதரப்பு விஷயங்கள் குறித்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…