#BREAKING: இலங்கைக்கு இந்தியா ரூ.7,500 கோடி கடனுதவி..!

Default Image

இலங்கை நிதி நெருக்கடி:

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இந்நிலையில், இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கும், மருந்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியா கடன் வழங்கியது.

ரூ.7,500 கோடி கடன்:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை இலங்கை நிதியமைச்சர் ஸ்ரீ பசில் ராஜபக்ச இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​​இருதரப்பும் பரஸ்பர நலன் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். அதே கூட்டத்தில், உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் வசதிக்காக SBI மற்றும் இலங்கை அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது (ரூ.7,500 கோடி) கடன் கொடுக்கிறது. முன்னதாக, இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்திய உதவிகள் மற்றும் இருதரப்பு விஷயங்கள் குறித்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்