ட்ரூகாலருக்கு இணையான பாரத் காலர் என்ற செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் பல உள்ளூர் செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், பாரத் காலர் என்ற செயலி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. பாரத் காலர் என்பது போனில் தெரியாத அழைப்புகளை அடையாளம் காண உருவாக்கப்பட்ட செயலியாகும். பாரத் காலர் ஐடி 100% மேட் இன் இந்தியா காலர் ஐடி ஆப். தங்கள் போனில் அடையாளம் மற்றும் தெரியாத அழைப்புகளை தெரிந்து கொள்ள பாரத் காலர் பயன்படுகிறது.
உங்களுக்கு தெரியாத அழைப்புகள் வரும்போது பாரத் காலர் யார் அழைக்கிறார்கள் என பெயரைக் காட்டும். பாரத் காலர் ஐடியில் 50 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களின் டேட்டா மற்றும் உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான எண்களின் டேட்டா உள்ளன. பாரத் காலரை பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் மாணவர் பிரஜ்வால் சின்ஹா மற்றும் குணால் பஸ்ரிச்சா உருவாக்கினார்.
சில விஷயங்களில் ட்ரூகாலரை விட தங்கள் ஆபரே சிறந்தது என்றும், ட்ரூகாலரை விட இந்தியர்கள் அதை நன்றாக அனுபவிப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் நேஷ்னல் ஸ்டார்ட்அப் விருதுகள் 2020 வென்றவர்கள். இந்த செயலி பிளேஸ்டோர் மற்றும் iOS இல் இலவசமாகக் கிடைக்கிறது. இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பாரத்காலர் பயனர்களின் தொடர்புகள் மற்றும் அழைப்பு பதிவுகளைச் சேமிக்காது. அவர்களின் தனியுரிமை பாதிக்கப்படாது. மேலும், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பயனர்களின் தொலைபேசி எண்களின் தரவுத்தளம் இருக்காது. பாரத்காலரின் எல்லா தரவும் என்கிரிப்டேட் பார்மேட்டில் சேமிக்கப்படுகிறது. இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்கள் யாரும் பயன்படுத்த முடியாது. தற்போது ஆங்கிலம் தவிர, இந்தி, மராத்தி, தமிழ், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக True Caller செயலியை இந்திய இராணுவம் தடைசெய்த பிறகு இது வந்துள்ளது. True Caller செயலி ஸ்பைவேராக இருக்கலாம் என்று கூறப்பட்டதால் True Caller தடை செய்யப்பட்டது. சமீபத்தில் True Caller மொபைல் போன்களிலிருந்து உடனடியாக நீக்குமாறு ராணுவ வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. TrueCaller செயலி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…