இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.! பல்வேறு நம்பிக்கைகளின் தாயகம்.! அமெரிக்கா பாராட்டு.!
மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியா, பல்வேறுபட்ட நம்பிக்கைகளின் தாயகமாக இருக்கிறது என அமெரிக்கா புகழ்ந்துள்ளது.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள மத சுதந்திர சூழ்நிலையை கவனமாக கண்காணித்து வருவதாக கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை, “நிச்சயமாக இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இது பல்வேறு நம்பிக்கைகளின் தாயகமாக இருக்கிறது என்று கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு, சர்வதேச மத சுதந்திரம் 1998 இன் படி உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச மத சுதந்திரம் குறித்த தனது அறிக்கையில், சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான், கியூபா, வடகொரியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட 12 நாடுகளை “குறிப்பிட்ட அக்கறையுள்ள நாடுகள்” என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.