உலக மக்கள்தொகை அறிக்கை படி சீனாவின் மக்கள் தொகையை 2023-ல் இந்தியா தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA), ‘8 பில்லியன் உயிர்கள், எல்லையற்ற சாத்தியக்கூறுகள் உரிமைகள் மற்றும் தேர்வுகளுக்கான வழக்கு’ என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் 2011ம் ஆண்டிற்கு பிறகு தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகை கணக்கிடப்படவில்லை. தகவலின் படி, அடுத்த 6 மாதங்களுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனாகவும் (142.8 கோடி), சீனாவின் மக்கள் தொகை 1,425.7 மில்லியனாகவும் (142.5 கோடி) இருக்கும் என்றும் இது 2.9 மில்லியன் (29 லட்சம்) வித்தியாசத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 1950 ஆம் ஆண்டு யுஎன்எஃப்பிஏ மக்கள்தொகை தரவுகளை சேகரித்து வெளியிடத் தொடங்கிய பிறகு இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை முந்தியது இதுவே முதல் முறை. யுஎன்எஃப்பிஏ அறிக்கைபடி, இந்தியாவின் மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 18 சதவீதம் பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26 சதவீதம் பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள், 68% பேர் 15-64 மற்றும் 7% 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 200 மில்லியன் (20 கோடி) பேர் உள்ளதாவும் கூறப்படுகிறது.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…