மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்.? வெளியான சர்வதேச சர்வே ரிப்போர்ட்.!

Default Image

உலக மக்கள்தொகை அறிக்கை படி சீனாவின் மக்கள் தொகையை 2023-ல் இந்தியா தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA), ‘8 பில்லியன் உயிர்கள், எல்லையற்ற சாத்தியக்கூறுகள் உரிமைகள் மற்றும் தேர்வுகளுக்கான வழக்கு’ என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் 2011ம் ஆண்டிற்கு பிறகு தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகை கணக்கிடப்படவில்லை. தகவலின் படி, அடுத்த 6 மாதங்களுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனாகவும் (142.8 கோடி), சீனாவின் மக்கள் தொகை 1,425.7 மில்லியனாகவும் (142.5 கோடி) இருக்கும் என்றும் இது 2.9 மில்லியன் (29 லட்சம்) வித்தியாசத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 1950 ஆம் ஆண்டு யுஎன்எஃப்பிஏ மக்கள்தொகை தரவுகளை சேகரித்து வெளியிடத் தொடங்கிய பிறகு இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை முந்தியது இதுவே முதல் முறை. யுஎன்எஃப்பிஏ அறிக்கைபடி, இந்தியாவின் மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 18 சதவீதம் பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26 சதவீதம் பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள், 68% பேர் 15-64 மற்றும் 7% 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 200 மில்லியன் (20 கோடி) பேர் உள்ளதாவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்