தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு இந்தியா! சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேல் பெருமிதம்!

veeramuthu

கடந்த ஜூலை 14ல-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம்,இன்று மாலை 5.44 மணிக்கு நிலவின் தென்துருவத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது, 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. திட்டமிட்டபடி ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கி உள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

அதைப்போல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கிய பிறகு பேசிய இயக்குனர் பி வீரமுத்துவேல் “இன்று நிலவின் தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளோம். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த பயணமும் திட்டமிட்ட நேரப்படி கச்சிதமாக நடந்து வெற்றி பெற்றிருப்பது பெருமிதமாக உள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த பயணமும் திட்டமிட்ட நேரத்தின் படி, கன கச்சிதமாக நடந்து வெற்றி பெற்றிருப்பது பெருமிதமாக உள்ளது. நிலவின் தென் துருவத்தின் அருகில் லேண்டரைக் கொண்டு சென்று நிலவைத் தொட்ட முதல் நாடு, நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தியா.

எஸ். சோமநாத் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், தளராத உறுதியும் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியது. இந்த வெற்றிக்கு வழிவகுத்த அனைத்து விஞ்ஞானிகளும் மிக்க நன்றி” என இயக்குனர் பி வீரமுத்துவேல் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்