இந்தியாவில் 95 நாட்களில் 13 கோடி மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 95 நாட்களில் 13 கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிக விரைவாக செயல்படும் நாடு இந்தியா என்று மத்திய சுகாதார அமைச்சகம் இதுகுறித்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 100 நாட்களில் 13 கோடி தடுப்புசி வழங்கப்பட்டது. அதேபோல் சீனாவில் 109 நாட்களில் போடப்பட்டது. ஆனால் இந்தியாவில் 95 நாட்களில், இதுவரை 13,01,19,310 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…