உலக காற்றுத் தர அறிக்கையின்படி இந்தியா உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நிறுவனமான IQAir வெளியிட்ட 2022 ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத் தர அறிக்கையின் படி, உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டில் 5 வது இடத்தில் இருந்த இந்தியா 3 இடங்கள் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு காற்றில் இருக்கும் திடப்பொருள் PM 2.5, 53.3 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக குறைந்திருந்தாலும், அது உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான வரம்பை விட 10 மடங்கு அதிகமாகும்.
131 நாடுகளில் உள்ள 7,300 க்கும் மேற்பட்ட இடங்களில் 30,000 க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பாளர்களின் தரவுகள் அடிப்படையில் PM 2.5 அளவைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டிலிருந்து 2,200 க்கும் குறைவான நகரங்களை உள்ளடக்கிய தரவரிசைகளில் அதிகம்.
இந்தியாவில் காற்று மாசுபாட்டின் பொருளாதாரச் செலவானது 150 பில்லியன் டாலர்கள் என்று அறிக்கை கூறுகிறது. போக்குவரத்துத் துறையால் PM 2.5 மாசுபாட்டின் 20-35 சதவீதம் ஏற்படுகிறது. மீதமுள்ள மாசுபாட்டிற்கு காரணங்களாக இருப்பது தொழிற்சாலைகள் , நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உயிரி எரிபொருளாகும்.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் சீனாவின் ஹோட்டான் ஆகிய நகரங்கள் மாசுபட்ட முதல் இரண்டு நகரங்களாக உள்ளன. அதைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் பிவாடி மற்றும் டெல்லி நான்காவது இடத்தில் உள்ளன. டெல்லியின் PM 2.5 அளவு (92.6 மைக்ரோகிராம்) பாதுகாப்பான வரம்பை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…