உலகில் மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியா 8-வது இடம்..! சுவிஸ் நிறுவனம் அறிக்கை..!

Default Image

உலக காற்றுத் தர அறிக்கையின்படி இந்தியா உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நிறுவனமான IQAir வெளியிட்ட 2022 ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத் தர அறிக்கையின் படி, உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டில் 5 வது இடத்தில் இருந்த இந்தியா 3 இடங்கள் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு காற்றில் இருக்கும் திடப்பொருள் PM 2.5,  53.3 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக குறைந்திருந்தாலும், அது உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான வரம்பை விட 10 மடங்கு அதிகமாகும்.

131 நாடுகளில் உள்ள 7,300 க்கும் மேற்பட்ட இடங்களில் 30,000 க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பாளர்களின் தரவுகள் அடிப்படையில் PM 2.5 அளவைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டிலிருந்து 2,200 க்கும் குறைவான நகரங்களை உள்ளடக்கிய தரவரிசைகளில் அதிகம்.

இந்தியாவில் காற்று மாசுபாட்டின் பொருளாதாரச் செலவானது 150 பில்லியன் டாலர்கள் என்று அறிக்கை கூறுகிறது. போக்குவரத்துத் துறையால் PM 2.5 மாசுபாட்டின் 20-35 சதவீதம் ஏற்படுகிறது. மீதமுள்ள மாசுபாட்டிற்கு காரணங்களாக இருப்பது தொழிற்சாலைகள் , நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உயிரி எரிபொருளாகும்.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் சீனாவின் ஹோட்டான் ஆகிய நகரங்கள் மாசுபட்ட முதல் இரண்டு நகரங்களாக உள்ளன. அதைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் பிவாடி மற்றும் டெல்லி நான்காவது இடத்தில் உள்ளன. டெல்லியின் PM 2.5 அளவு (92.6 மைக்ரோகிராம்) பாதுகாப்பான வரம்பை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்