துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்வதற்கு தயாராக இருக்கிறது. – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
இன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இது பிப்ரவரி 8ஆம் தேதி வரையில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போது கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கம் எனும் நிலைமைக்கு முன்னேறியுள்ளனர் என பெருமையாக பேசினார். மேலும், துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “துருக்கியில் ஏற்பட்ட அழிவுகரமான நிலநடுக்கத்தை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளன. தற்போது நிலநடுக்கத்தால் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அதிக சேதங்கள் என சந்தேகிக்கப்படுகின்றன. அவர்களுக்காக 140 கோடி இந்தியர்களின் அனுதாபங்கள் அவர்களுக்கு உள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்வதற்கு தயாராக இருக்கிறது. என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…