நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு  உதவ இந்தியா தயார்.! பிரதமர் மோடி பேச்சு.!

Default Image

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்வதற்கு தயாராக இருக்கிறது. – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

இன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இது பிப்ரவரி 8ஆம் தேதி வரையில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போது கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கம் எனும் நிலைமைக்கு முன்னேறியுள்ளனர் என பெருமையாக பேசினார். மேலும், துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “துருக்கியில் ஏற்பட்ட அழிவுகரமான நிலநடுக்கத்தை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளன. தற்போது நிலநடுக்கத்தால் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அதிக சேதங்கள் என சந்தேகிக்கப்படுகின்றன. அவர்களுக்காக 140 கோடி இந்தியர்களின் அனுதாபங்கள் அவர்களுக்கு உள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்வதற்கு தயாராக இருக்கிறது. என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்