இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது – பிரதமர் மோடி
இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது.
இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பாடலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதர் மோடி படேலின் சிலைக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின், அவரது பிறந்தநாள் விழாவில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும், பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது என்றும், புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த தியாகத்தை பற்றி வருத்தப்படாமல், சிலர் அரசியல் செய்தனர் என்றும், எதிர்க்கட்சியினர் நாட்டின் நலன்கருதி அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.