உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது – ராகுல் காந்தி ட்வீட்
உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது என வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து.
டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பவினா படேல், சீனாவின் மியாவோ ஜாங்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனைத்தொடர்ந்து, இறுதி போட்டியில் பவினா படேல், உலகின் நம்பர் 1 வீராங்கனை சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டதில் பவினா 3:0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
இதனால், பவினா படேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதுவே பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு பிரதமர் உட்பட பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்,.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எம்பியுமான ராகுல் காந்தி வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு வாழ்த்துக்கள். உங்கள் சாதனையை இந்தியா பாராட்டுகிறது. உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது என தெரிவித்துள்ளார்.
Congratulations to Bhavina Patel for winning the #Silver . India applauds your achievement. You’ve done the nation proud. #TokyoParalympics pic.twitter.com/WcsI64JEFu
— Rahul Gandhi (@RahulGandhi) August 29, 2021