மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமிதம் கொள்கிறது – பிரதமர் வாழ்த்து!
கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற மருத்துவருமான பிதன் சந்திரராய் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வருடம் தோறும் ஜூலை 1-ஆம் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பிதன் சந்திரராய் அவர்கள் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை ஒன்றாம் தேதி தான்.
எனவே, இன்றைய நாள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்குமான நாளாக கருதப்பட்டு வரும் நிலையில், பலரும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா பரவி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கூட தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூகப் பணியாற்றி வரக்கூடிய மருத்துவர்கள் பாராட்டுக்குரியவர்கள் தான்.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து மருத்துவர்களும் மேற்கொள்ளும் பணியால் இந்தியா பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ தினமாக கடைபிடிக்கப்படும் ஜூலை 1 ஆம் நாளான இன்று மாலை 3 மணிக்கு இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் மருத்துவ சமூகத்துடன் தான் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
On Doctors Day, my greetings to all doctors. India’s strides in the world of medicine are commendable and have contributed to making our planet healthier.
Here is what I said during #MannKiBaat a few days ago. pic.twitter.com/KWw3WTrVAA
— Narendra Modi (@narendramodi) July 1, 2021