உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது -பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம்பெற்றுள்ள அமைச்சரவை இது. இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடைபெறுகிறோம். இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில்தான் அதிக அளவு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. வெளிநாட்டு தலைவர்களும் தற்போது இந்திய தலைவர்களை மதிக்க தொடங்கியுள்ளனர்.எனது ஆட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது.
கறுப்பு பணத்திற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியது பெருமிதம் அளிக்கிறது. முக்கியமான சட்டங்களை இயற்றியதற்காக எதிர்கால சந்ததியினர் மக்களவையை பாராட்டுவார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் இடர்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்திருக்கிறோம்.ஐ.நா. அவையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் இடர்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்திருக்கிறோம். பெண் எம்.பி-க்களுக்கு எனது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பெண்கள் என்பது பெருமை. உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்