இந்தியாவில் புதிய கொரோனா வகையால் பாதிப்பு இல்லை- கோவிட்-19 குழுவின் தலைவர்.!
இந்தியாவில் புதிய கோவிட்-19 வகைகள் இல்லை, அடுத்த வாரம் இது பரவுவதற்கும் வாய்ப்பில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் பிற நாடுகளில் தற்போது கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனோவின் துணை வகையான வைரஸ் குறித்து எந்தவித அறிகுறியும் இந்தியாவில் இல்லை என்றும், யாருக்கும் இந்த புதிய கொரோனா வகையின் தொற்று ஏற்படவில்லை என்று கோவிட்-19 குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார்.
மேலும் வரும் வாரங்களில் இந்த கொரோனா அறிகுறிகள் அதிகரிப்பதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லை என்று அவர் மேலும் கூறினார். இதனால் மக்கள் யாரும் தேவையின்றி பயப்பட வேண்டாம் என அரோரா கூறியுள்ளார்.