சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு
சர்வதேச சோலார் கூட்டமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் இன்று நடைபெற்று வருகிறது .ஆகவே பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.அவரது உரையில் , விஸ்வ பாரதி இன்று நூற்றாண்டு விழா கொண்டாடுவதால் ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு பெருமையான தருணம்.விஸ்வ பாரதி என்பது குருதேவின் சிந்தனை, பார்வை மற்றும் கடின உழைப்பின் உண்மையான உருவகமாகும். குருதேவ் கண்ட கனவை உருவகப்படுத்த நாட்டுக்கு தொடர்ச்சியான ஆற்றலை வழங்கும் இந்தியாவுக்கு இது ஒரு வகையான அபிமான இடம்.
இன்று, சர்வதேச சோலார் கூட்டமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது. பாரிஸ் உடன்படிக்கையின் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய சரியான பாதையில் செல்லும் ஒரே பெரிய நாடுஇந்தியா தான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த பல்வேறு இயக்கங்கள் தியாகம், தவம் ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திர போராட்டத்தில் தியாகம் செய்ய முன்வந்தனர்.கல்வி நிறுவனங்கள் புதிய ஆற்றலைக் கொடுத்தன.புதிய திசையைக் கொடுத்தன என்று தெரிவித்துள்ளார்.