இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது -ராகுல் காந்தி
இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் 140-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது .இதனால் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய ,மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Quick aggressive action is the answer to tackling the #Coronavirus . India is going to pay an extremely heavy price for our governments inability to act decisively.
— Rahul Gandhi (@RahulGandhi) March 18, 2020
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்று பதிவிட்டுள்ளார்.