கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிறைந்ததுதான் இந்தியா – ராகுல் காந்தி
வெறுப்புணர்வை ஒழிப்பதே ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரை.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த ஒற்றுமை யாத்திரை 11வது மாநிலம், 108வது நாளான இன்று டெல்லியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, வெறுப்புணர்வை ஒழிப்பதே இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம். ஆகையால், ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் வெறுப்புணர்வை நீக்க நினைத்தேன் என்று கூறிய ராகுல் காந்தி, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிறைந்ததுதான் இந்தியா எனவும் தெரிவித்துள்ளார்.