ஆப்கானிஸ்தான் பெண் உயர்கல்விக்கு தடை.! இந்தியா எதிர்ப்பு.! – வெளியுறவுத்துறை அறிவிப்பு..!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற கருத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. – வெளியுறவு துறை.
அண்மையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிப்பதாக தாலிபான்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்ப்புக்கு ஆப்கானிஸ்தானிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதே போல, மற்ற நாடுகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.
தாலிபான்களின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற கருத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தியா, ‘ அனைத்து ஆப்கானிஸ்தானியர்களின் உரிமைகளையில் மதிக்கும் மற்றும் பெண்களின் சம உரிமைகளை உறுதி செய்யும். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.