எந்த சோதனையாக இருந்தாலும் இந்தியா மீண்டும் வரும் என்பது வரலாறு – மோடி.!

Published by
murugan

இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சி இன்று முதல் 11-ம் தேதி வரை அதாவது மூன்று நாள்கள் நடக்க உள்ளது. உலக நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த ஆறு ஆண்டுகளாக வரி சீரமைப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீர்திருத்த நடவடிக்கையால் விவசாயம், சிறு, குறு தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும். கொரோனா கட்டுப்படுத்துவதில் இந்தியா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும், எந்த சோதனையாக இருந்தாலும் அதில் இந்தியா மீண்டும் வரும் என்பது வரலாறு. மக்களின் சுகாதார நலன் போல பொருளாதார நிலையிலும் இந்திய அக்கறை கொண்டுள்ளது. வேளாண் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் முதலீட்டுக்கு உகந்ததாக உள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று தெரிவித்தார்.

 

Published by
murugan
Tags: #Modi

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

9 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

40 minutes ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

1 hour ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

9 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

10 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

11 hours ago