இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து …..!வெளியுறவுத்துறை அமைச்சகம்
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.இலங்கையில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என இந்தியா நம்புகிறது. இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.