கொரோனாவின் கொடுமையான பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியா!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை.
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 70 லட்சத்தையும் கடந்து சென்று கொண்டுள்ளது. இந்தியாவில் 287,155 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,107 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 12,375 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 388 பேர் உயிரிழந்துள்ளனர். 140,979 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில், 138,069 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.