கொரோனா தடுப்பூசி திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் ஸ்ரீரமச்சந்திரா இருதய நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாகொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி அவர்களும் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர் கொரோனா வைரஸ் தொற்று நேரத்தில் இந்தியாவின் நிலையை எண்ணி ஒட்டுமொத்த உலகமே கவலைப்பட்டது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தற்போது ஒட்டு மொத்த உலகத்திற்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக இருப்பதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டங்களை இந்தியா கையிலெடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பலரது வாழ்வை இந்தியாவின் பொது சுகாதார திட்டங்கள் தொட்டு உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பாகவே இந்திய நல்வாழ்வு மீதான கவனத்தை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ,உலகம் கொரோனா வைரஸ் மருந்துக்கான தேவையில் இருந்த பொழுது உலகின் பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்திய அனுப்பி வைத்ததாகவும், இதில் தான் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதுடன் உள்நாட்டில் எவ்வளவு அக்கறை உள்ளதோ அதே அக்கறையைக் உலக அளவிலும் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…