கனடா நாட்டு மக்களுக்கு இ-விசா வசதியை அறிமுகப்படுத்தியது இந்தியா.!
கனடா பாஸ்போர்ட் வைத்திருக்கும் அந்நாட்டு குடிமக்களுக்கு இ-விசா வசதியை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கனடா நாட்டு குடிமக்களுக்கு, இந்தியாவிற்கு வருவதற்கான இ-விசா வசதியை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் கனேடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வசதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனை இந்திய உயர் ஆணையம், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த நடைமுறை டிச-20, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
@HCI_Ottawa is glad to announce restoration of e-Visa facility for Canadian passport holders. Details are given in the Press Release. @MEAIndia @IndianDiplomacy @SecretaryCPVOIA @cgivancouver @IndiainToronto @DDNewslive @PIB_India @PIBHomeAffairs @TOIIndiaNews @htTweets @CanadaFP pic.twitter.com/Q0Ral6NUMV
— India in Canada (@HCI_Ottawa) December 20, 2022
சுற்றுலா, வணிகம், மருத்துவம் அல்லது மாநாட்டு நோக்கங்களுக்காக இந்தியாவிற்கு வர விரும்பும் கனேடிய மக்கள் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இ-விசாவிற்கு தகுதி பெறாத பட்சத்தில், இந்தியாவிற்கு பயணம் செய்யும் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பேப்பர் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்திய உயர் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.