இனி முக்கிய மருந்துகள் மற்றும் தேவையான ரத்தம் ஆகியவை இந்தியாவிற்குள் பறந்து வரும்!

இந்தியாவில் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டாலும் அங்கு அடிப்படை சிகிசிச்சைக்கு மட்டுமே மருத்துவம் செய்யப்பட்டு வருகிறது. ஏதேனும் முக்கிய மருத்துவ தேவைக்காக மருந்துகள் தேவைப்பட்டாலும், ரத்தம் தேவைப்பட்டாலும் நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் இருந்து எடுத்து வரவோ, அல்லது பாதிக்கப்பட்டவர்களை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்வதால் காலதாமதமாகிவிடுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை நம்நாடு யோசித்து வருகிறது.
தற்போது இம்முயற்சிக்கு முதல்படியாக மகாராஷ்டிர மாநிலம் விரைவில் பறக்கும் ட்ரான்-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் முக்கிய மருந்துகள், தேவையான ரத்தம் போன்றவைஇ இந்த ட்ரோன் மூலம் கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் சாலைப்போக்குவரத்து, நேரச் செலவு போன்றவை குறைக்கப்பட்டு விரைவில் பாதிக்கப்பட்டவர்கள் பயன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்த ட்ரோனை மகாராஷ்டிராவில் முதன் முதலாக அம்மாநில அரசு அறிமுகப்படுத்தபட உள்ளதாம். கலிபோர்னியாவில் உள்ள ஜிப்லைன் எனும் நிறுவனம் இந்த ட்ரோன்-ஐ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025