ஈரானுக்கு கை விரித்த இந்தியா…கை கொடுக்கும் சவுதி அரேபியா……..!அமெரிக்காவின்ஆட்டத்தில் ஈரான்…!!!
இந்தியா சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழ்நிலையில் அந்த இழப்பை ஈடுகட்டும் நோக்கில் சவுதி அரேபியா முன்வந்துள்ளது.
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது மேலும் அந்நாட்டிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக இந்தியாவும் நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனால் ஏற்படும் இழப்பை ஈடு கட்டும் நோக்கத்தில் இருக்கும் இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெயை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது.மேலும் வருகிற நவம்பர் மாதம் 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு கூடுதலாக வழங்க உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
மேலும் வழக்கமாக இந்தியா மாதம் ஒன்றுக்கு 25 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை சவுதி அரேபியாவிடம் இருந்தும், 9 லட்சம் பேரல்களை ஈரானிடம் இருந்தும் வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU