இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை வெளியீடு.இதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது,மேலும் வைரஸ் தொற்று எண்ணிக்கையை குறைக்க நாடுமுழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலேயே தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை சுகாதார அமைச்சகம் இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி பட்டியலில் உள்ள மாவட்டங்கள் பெங்களூரு, புனே, டெல்லி, அகமதாபாத், எர்ணாகுளம், நாக்பூர், மும்பை, கோழிக்கோடு, ஜெய்ப்பூர் மற்றும் தானே, ஆகிய மாவட்டங்களாகும், மேலும் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதில் தற்போது பெங்களூர் மாவட்டம் தான் முதல் இடத்தில் உள்ளது எனவும் தெவித்துள்ளது, மேலும் நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 414,188 பேராக பதிவாகியுள்ளனர், மேலும் 3,915 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரையிலும் உயிரிழப்பு எண்ணிக்கை, 234,083 ஆக அதிகரித்துள்ளது.
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…