இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்களின் பட்டியல் வெளியீடு !

இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை வெளியீடு.இதில்  பெங்களூரு முதல் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும்  நிலையில்  தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது,மேலும் வைரஸ் தொற்று எண்ணிக்கையை குறைக்க நாடுமுழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிலேயே தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை சுகாதார அமைச்சகம் இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி பட்டியலில் உள்ள மாவட்டங்கள் பெங்களூரு, புனே, டெல்லி, அகமதாபாத், எர்ணாகுளம், நாக்பூர், மும்பை, கோழிக்கோடு, ஜெய்ப்பூர் மற்றும் தானே, ஆகிய மாவட்டங்களாகும், மேலும் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதில் தற்போது பெங்களூர் மாவட்டம் தான் முதல் இடத்தில் உள்ளது எனவும் தெவித்துள்ளது, மேலும் நேற்று மட்டும்  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 414,188 பேராக பதிவாகியுள்ளனர், மேலும் 3,915 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரையிலும் உயிரிழப்பு எண்ணிக்கை, 234,083 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்