உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம் குறைவு.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவில், 1,118,107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27,503 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 700,399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் தீவிரமான நடவடிக்கையால், கடந்த மே மாதத்திலிருந்து, கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, மே-12ம் தேதி 3.2 சதவீதமாக இருந்த உயிரிழப்பு, ஜூன்-1ம் தேதி 2.82 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், ஜூன் 10-ம் தேதி, 2.72 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், தற்போது 2.49 சதவீதமாக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கைக்கும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கைக்கும் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…