கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம்!
கொரோனாவால் அதிகப்படியான மருத்துவர்கள் இந்தியாவில்தான் உயிரிழக்கின்றனர்.
உலகம் முழுவதிலும் கொரனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுவரை 1.84 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், அதிலிருந்து மக்களை பாதுகாக்க 24 மணி நேரமும் அயராது உழைப்பவர்கள் மருத்துவர்கள்தான். ஆனால், அந்த மருத்துவர்கள் பலர் இந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிர் இழக்கவும் நேரிடுகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழந்த மருத்துவர்கள் இந்தியாவில் தான் அதிகம் என ஒரு ஆய்வு கூறுகிறது. தமிழகம் முழுவதிலும் மார்ச் முதல் இதுவரை கொரோனா காரணமாக 44 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனராம். இதில் 20 பொது மருத்துவர்களும் 24 சிறப்பு மருத்துவர்களும் அடங்கியுள்ளனர். இவ்வாறு இந்தியாவில் 175 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனராம். இந்தியாவிலும் தமிழகத்தில்தான் மருத்துவர்களின் உயிரிழப்பு அதிக அளவில் உள்ளது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.