#Breaking:அதிர்ச்சி தகவல்…!கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா 2 வது இடம்;இதுவரை,1 கோடியே 45 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகிறது.இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.இதற்கு முன்னர் 50 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த தினசரி பாதிப்புகள் தற்போது புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,34 ,692 பேர் கொரோனா தொற்றினால் பாதிகப்பட்டுள்ளனர்.இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1கோடியே 45 லட்சத்து 26 ஆறாயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,ஒரே நாளில் 1341 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து,நாடு முழுவதும் 16 லட்சம் பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால்,உலகிலேயே ஒரே நாளில் அதிக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.