தீவிரவாதம் என்றாலே நீலிக்கண்ணீர் நாடகம்!ஜ.நாவில் பாக்., விளாசிய இந்தியா

Default Image

தீவிரவாதம் குறித்த விவாதம் எப்போது நடைபெற்றறாலும் அதற்கு  தான் பலியாகி விட்டதாக பாகிஸ்தான் நாடகமாடி வருவது வாடிக்கையாகி விட்டதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜ.நா மனித உரிமை கவுன்சிலில் தீவிரவாதம் குறித்த விவாதம் குறித்து வெளியிட்ட ஜ.நாவுக்கான இந்திய செயலர் விமார்ஷ் ஆர்யன்,ஐ.நாவில்  கூறியதாவது:

பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக சாடினார்.சர்வதேச நாடுகளின் கவனத்தை தவறாக திசை திருப்பும் திட்டத்துடனேயே பாகிஸ்தான் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று கூறிய அவர் சொந்த நாட்டில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா சிறுபான்மையினரை துன்புறுத்திகிறது என்று கூற என்ன அருகதை உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.மேலும் சிந்து மாகாணத்தில் இந்து பெண்ணை கடத்தி மதமாற்றம் செய்த காட்டுமிராண்டி ஆட்சி நடத்தும் பாகிஸ்தான் ஜனநாயகம் முழுமையாக தழைத்தோங்கும் இந்தியாவில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக நடத்தப்படுகிறார்கள் என்பதை பற்றி அறியாமல் பேசுவதாக பாக்.,மீது குற்றம் சாட்டினார்.அடுக்கடுக்கான குற்றச்சாட்டால் அதிர்ந்து பாகிஸ்தான் வாயடைத்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்