5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் ,1 லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகளை அனுப்பிய இந்தியா.!
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகள் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு பின்பற்றி வருகின்றனர்.
கொரோனாவிற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் மலேரியாவிற்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனாவுக்கும் கொடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து இந்தியாவில் கொடுக்கபடுகிறது. இந்த முழுமையாக குணமடையவிட்டாலும் குறிப்பிட்ட அளவு பலன் தருகிறது.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து 48 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டு இருந்த நிலையில் 35.82 லட்சம் மாத்திரைகளை மட்டும் இந்தியா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மன், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், பிரேசில், பூடான், போன்ற நாடுகளும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டுள்ளன.
இந்நிலையில் 5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும், 1 லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகளையும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.