மற்றொரு மைல்கல்லை எட்டிய இந்தியா! எல்-1 புள்ளியை அடைந்த ஆதித்யா விண்கலம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 127 நாட்களாக பல்வேறு கட்டங்களை கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வரும் ஆதித்யா விண்கலம், இன்று மாலை எல்-1 புள்ளிக்கு அருகே நிறுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.

ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியின் அருகே இன்று நிலைநிறுத்தப்படும் – இஸ்ரோ அறிவிப்பு!

எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்1’ விண்கலம் எல்-1 சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, அதாவது, எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்து ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்படி, ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கிமீ தொலைவிலுள்ள எல்-1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஹாலோ சுற்றுப்பாதையில் சுற்றியபடி, சூரியன் குறித்து ஆதித்யா விண்கலம் ஆய்வை மேற்கொள்ளும். எனவே, சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்து, ஆதித்யா எல்-1 விண்கலம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

Recent Posts

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

9 minutes ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

46 minutes ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

12 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

16 hours ago