இந்தியாவுக்கு தடுப்பூசி தேவைகள் இருந்தபோதிலும் 123 நாடுகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் மக்கள் கடைபிடித்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதே தற்பொழுது கொரோனாவிற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே உலகின் பல நாடுகளிலும் மக்கள் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற பிற நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று நடைபெற்ற அணிசேரா நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்கள், இந்தியா எப்போதும் அனைவரின் சுதந்திரத்திற்காகவும் பாடுபடும் என கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு சொந்த தேவை இருந்த போதிலும் கூட 59 அணிசேரா நாடுகள் உட்பட 123 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேம்படுத்தக்கூடிய உலகம் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக உள்ளதாகவும், எல்லோரும் பாதுகாப்பு அடையும் வரை யாரும் பாதுகாக்க பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…