#BIGBREAKING: நிலவில் கால் பதித்தது சந்திரயான் -3! வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

Chandrayaan3Mission

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென்துருவத்தை ஆராய, ரூ.615 கோடி செலவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

பூமியிலிருந்து நிலவுக்கு உயர்த்திய நிகழ்வு:

ஜூலை 15ம் தேதி முதற்கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earthbound firing-1) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 41762 கிமீ x 173 கிமீ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, நான்கு கட்டங்களாக சுற்றுப்பாதை உயர்த்தும்  முறை வெற்றிகரமாக நிகழ்த்தியது. ஜூலை 25ம் தேதி ஐந்தாம் கட்டத்தின் போது, அதாவது இறுதி கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் பணி முடிந்த பின், விண்கலமானது 127603 கிமீ x 236 கிமீ சுற்றுப்பாதையை அடைந்தது.

நிலவை நோக்கி பயணம்:

ஆகஸ்ட் 1ம் தேதி டிரான்ஸ் லூனார் இன்செர்ஷன் (டிஎல்ஐ) சுழற்சி மூலம் சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து புறப்பட்டு நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. அன்றைய தினம், பூமியிலிருந்து நிலவுக்கு 288 கிமீ x 369328 கிமீ ஆக இருந்தது. ஆகஸ்ட் 4ம் தேதி விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்தது.

பின்னர், ஆகஸ்ட் 5ம் தேதி லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) அதாவது, சந்திரயான்-3 விண்கலமானது பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.

நிலவின் சுற்றுவட்ட பாதை குறைப்பு:

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிடபட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டதை தொடர்ந்து, அடுத்த மூன்று கட்டங்களாக சுற்றுவட்ட பாதை குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, ஆகஸ்ட் 16 ஆம் தேதி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.

இதுவே, உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும்.

பிரிந்தது ‘விக்ரம்’ லேண்டர்:

இந்நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதி, சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உந்துவிசைக் கலனும், லேண்டர் பகுதியும் பிரிந்து, இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொண்டது.

டீபூஸ்டிங் முறை:

உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டர், நிலவை சுற்றிவந்த நிலையில், லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு கட்ட டீபூஸ்டிங் முறையில் குறைக்கப்பட்டது.  அதன்படி, முதல் டீபூஸ்டிங் மூலமாக விக்ரம் லேண்டர் நிலவுக்கு நெருக்கமாக 113 கிமீ x 157 கிமீ தொலைவலும்,  இரண்டாம் டீபூஸ்டிங் மூலம், 25 கிமீ x 134 கிமீ சுற்றுப்பாதையில் நிலவை சுற்றி வந்தது.

நிலவில் கால் பாதித்த இறுதி தருணம்:

முதல்கட்டம்

தற்போது, 25 கி.மீ குறைந்த சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் லேண்டர், இன்று மாலை 5.30 மணி அளவில் நிலவின் தென் பகுதியில் குறைந்த வட்ட பாதையில் சுற்றி வந்தது. அப்போது அதன் உந்துவிசை கலன்கள் இயக்கப்பட்டு கிடைமட்டமாக சென்ற லேண்டர் பகுதி, நேர் கீழாக பயணிக்க தொடங்குகியது.

அதாவது, 7.5 கீ.மீ உயரத்திற்கு லேண்டரை குறைப்பது தான் முதல் முதல் கட்டம். அப்போது, லேண்டர் மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் வரும் நிலையில், அது மணிக்கு 1200 கி.மீ வேகமாக குறைக்கப்பட்டது. இந்த மொத்த நிகழும் நிகழ்வதற்கு 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. கடைசி 15 நிமிடங்களில் முதல் கட்டம் மட்டுமே 10 நிமிடங்கள் நடைபெற்றது.

இரண்டாம் கட்டம்

7.4 கி.மீ உயரத்தில் இருந்து 6.8 கி.மீ உயரத்திற்கு குறைப்பது தான் இரண்டாம் கட்டம். இந்த கட்டத்தின் போது, லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவது போன்று அதன் கால்கள் கீழ்நோக்கி இறக்கப்பட்டு, அதன் கோலம் 50 டிகிரி சாய்வாக மாற்றப்பட்டது.

மூன்றாம்  கட்டம் 

மூன்றாம் கட்டத்தில் 6.4 கி.மீ உயரத்தில் இருந்து 800 மீ உயரம் குறைக்கப்பட்டு, 50 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் 90 டிகிரி கோணத்தில் செங்குத்தாக இறங்கும் வகையில் அதன் கோணம் மாற்றப்பட்டு தரையிறக்கப்பட்டது.

நான்காம் கட்டம் 

800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு குறைப்பட்டு, லேண்டரானது 22 நொடிகள் அப்புடியே அந்தரத்தில் நிற்க வைக்கப்பட்டது. இந்த கட்டத்தில் லேண்டரின் உள்ள அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டு, உந்துவிசை கொடுக்கப்பட்டு வேகம் படிப்படியாக மெதுவாக குறைக்கப்பட்டது. இந்த நேரத்தில் தான் லேண்டரில் உள்ள நான்கு கால்கள் மற்றும் மொத்த தொழில்நுட்பமும் செயல்பட்டு சமதள பக்கத்தை கண்டறிய தொடங்கியது.

ஐந்தாம் கட்டம்

எந்த இடத்தில் இறங்க வேண்டுமென முடிவு செய்து, லேண்டரானது, 150 மீட்டர் உயரத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்துக்கு தரை இறங்க தொடங்கியது.

ஆறாம் கட்டம்

ஆறாம் கட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் லேண்டரின் வேகத்தை குறைத்து கட்டுப்படுத்தி மெதுவாக தரையை நோக்கி இறக்கப்பட்டது. அப்பொழுது, லேசர் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு லேண்டரின் உயரம் கணக்கிடப்பட்டு நிதானமாக தரை இறங்கியது.

ஏழாவது கட்டம் 

இதனை தொடர்ந்து, 10 மீட்டர் உயரத்தில் லேண்டரின் என்ஜின்கள் அனைத்தும் அணைக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் இறங்குவதற்கான பணிகள் தொடங்கியது. அப்பொழுது, நொடிக்கு 2 மீட்டர் வேகத்தில் நிலவை நோக்கி தரை இறக்கப்பட்டது.

எட்டாம் கட்டம்

இறுதியாக, லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து  ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கியதும்.  விக்ரம் லேண்டர் ரோவரின் படங்களையும், பிரக்யான் ரோவர் லேண்டரின் படங்களையும் எடுத்து அடுத்ததாக அனுப்ப உள்ளது.இந்த நிகழ்வு நடைபெற சில மணி நேரங்கள் ஆகும்.

இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு  இந்தியா என்ற பெருமையை  பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest