3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளது – பிரதமர் மோடி.!

இந்தியாவில் கொரோனாவிற்கான 3 தடுப்பூசி சோதனை நிலையில் உள்ளதாக பிரதமர் மோடி இன்றைய உரையில் கூறியுள்ளார்.
இந்தியாவில் 74வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி அவர்கள் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி கொரோனாவிற்கான தடுப்பூசி நடைமுறைக்கு வருவதை குறித்து கூறினார். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மருந்தான கோவாக்ஸினை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளதாகவும், விஞ்ஞானிகள் பச்சை கொடி காண்பித்து அனுமதி அளித்ததும் நாடு முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்று மோடி அவர்கள் உரையில் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட உடன் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவிற்கு எதிரான பேரில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே இன்னும் சில மாதங்களில் கொரோனாவிற்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025