முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி-பிரதமர் நரேந்திர மோடி கருத்து
நீண்ட விவாதத்திற்கு பிறகு நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடுப்பு மசோதா. முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகியது.
இந்த நிலையில் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது.
இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும் முத்தலாக் தடை சட்டம் உதவும். முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களின் வலிமைக்கு தலை வணங்குகிறேன் .முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்து வாக்களித்த கட்சிகளும், எம்பிக்களுக்கும் நன்றி என்று தெரிவித்தார்.